திருச்சி பொன்மலைப்பட்டி காருண்யா நகரை சேர்ந்த வீரராகவன் மனைவி சிவகாமி ( வயது 50). இவரது வீட்டில் ஏற்கனவே கட்டிட வேலை பார்த்த நபர் ஒருவர் நேற்று ( 11.09.2023 ) இரவு மற்றொரு நபருடன் வந்து கதவை தட்டி சிவகாமியிடம் குடிக்க தண்ணீர் வேண்டும் என்று கேட்டுள்ளார். அவர் தண்ணீர் எடுக்க வீட்டுக்குள் சென்றபோது அவரை பின்தொடர்ந்து சென்ற 2 பேரும் சிவகாமி கழுத்தில் அணிந்திருந்த சுமார் 7 அரை பவுன் நகைகளை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து திருவெறும்பூர் போலீஸ் நிலையத்தில் சிவகாமி கொடுத்த புகாரின் அடிப்படையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.