குடியரசு தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறையில் சிறப்பாக செயல்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2025 குடியரசு தினத்தையொட்டி, காவல்துறையில் சிறப்பாக செயல்படும் வீரதீர செயல்களுக்கான விருது, மெச்சத்தக்க சேவைக்கான விருது மற்றும் மிகசிறப்பாக செயல்படும் காவலர்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த காவலர்களுக்கு 746 விருதுகள் மற்றும் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை போலீஸ் அதிகாரிகள் துரைகுமார் மற்றும் ராதிகா ஆகிய இருவருக்கு, காவல்துறையில் மிக சிறப்பாக செயல்படும் காவலர்களுக்கான ஜனாதிபதியின் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, தமிழகத்தை சேர்ந்த 21 காவலர்களுக்கு ஜனாதிபதியின் மெச்சத்தக்க சேவைகளுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி காவல் கண்காணிப்பாளர்கள் ஜெயலட்சுமி, ஸ்டாலின், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் தினகரன், பிரபாகரன், இணை காவல் கண்காணிப்பாளர் மதியழகன், கூடுதல் ஆணையர் வீரபாண்டி, இணை காவல் கண்காணிப்பாளர் பாபு உள்ளிட்ட 21 பேருக்கு ஜனாதிபதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.இவர்களுக்கு நாளை ஜனாதிபதி திரவுபதி முர்மு விருது வழங்கி கவுரவிப்பார்.
Comments are closed.