அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சுமார் ஒரு வார காலம் அங்கு தங்கி சிகிச்சை பெற்ற அவர் அங்கிருந்தபடியே அரசு அலுவல்களை கவனித்து வந்தார். உடல்நலம் தேறிய நிலையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவர், வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார். இந்த நிலையில் 10 நாட்களுக்குப் பிறகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று( ஜூலை 31) தலைமைச் செயலகம் வந்தார். இந்தநிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அண்மையில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய முதல்-அமைச்சரிடம் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். முதல்-அமைச்சரின் சகோதரர் மு.க.முத்து மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க பிரேமலதா நேரில் சென்றார். இந்த சந்திப்பின்போது, துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், தேமுதிகவின் சுதீஷ், பார்த்தசாரதி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். யாருடன் கூட்டணி என தேமுதிக முடிவு செய்யாத நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
Comments are closed.