Rock Fort Times
Online News

பிரணவ் ஜுவல்லரியில் கோடிக்கணக்கில் மோசடி-விளம்பர தூதுவர் பிரகாஷ்ராஜுக்கு சம்மன்….

திருச்சி, மதுரை,ஈரோடு, கோயம்புத்துாா்,  சென்னை, நாகர்கோவில், கும்பகோணம், புதுச்சேரி உள்ளிட்ட பல இடங்களில் பிரணவ் ஜுவல்லரி செயல்பட்டு வந்தது.  இதன் இயக்குநர்களாக திருச்சியை சேர்ந்த மதன் மற்றும் அவரது மனைவி கார்த்திகா இருந்து வந்தனர். இந்த நகை கடை  விளம்பர துாதுவா்களாக நடிகைகள் ராதிகா, சைத்ரா ரெட்டி மற்றும் பிரகாஷ்ராஜ் ஆகியோா்  உள்ளனா். இக்கடையில் நகை சீட்டு போட்டால் 12 மாதத்திற்கு 9 சதவீத போனஸ் மற்றும் வாங்கும் நகைகளுக்கு 9 முதல் 12 மாதங்களுக்கு செய்கூலி, சேதாரம் இல்லை என்பது உள்ளிட்ட பல்வேறு கவர்ச்சிகரமான சலுகைகள் அறிவிக்கப்பட்டது. இதனை நம்பிய அப்பாவி பொதுமக்கள் பலரும் பிரணவ் ஜூவல்லரி நகை சீட்டில் சேர்ந்தனர். இந்த நிலையில் நகை சீட்டில் சேர்ந்த சிலர் அதற்குரிய காலம் முடிவடைந்ததால் நகையை வாங்க கடைக்கு சென்றனர். ஆனால் அவர்களுக்கு நகையை வழங்காமல் கடை ஊழியர்கள் அலைக்கழித்து வந்தனர். இதனால் நகை சீட்டு செலுத்திய வாடிக்கையாளர்கள் நகைக்கடையை முற்றுகையிட்டனர். இதுகுறித்து புகார் அளிக்குமாறு போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் 500க்கும் மேற்பட்டோர் புகார் அளித்தனர். இதன் மூலம் கோடிக்கணக்கில் வாடிக்கையாளர்களிடம் பண மோசடி செய்யப்பட்டது உறுதியானது. இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள பிரணவ் ஜூவல்லரி நகைக்கடைகள் திடீரென மூடப்பட்டன. அதன் உரிமையாளர்கள் தலைமறைவானார்கள். பொதுமக்களின் புகார்களின் அடிப்படையில் அந்த நகைக்கடைகளில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது சிறிய நகைகள் மட்டுமே இருந்தன. பெரும்பாலான நகைகளை எடுத்துச் சென்று விட்டது தெரிய வந்தது.   அந்த நகைக்கடையின் மேனேஜர் நாராயணன் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அங்கு வெறும் ஐம்பதாயிரம் மட்டுமே இருந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜா்படுத்தி  சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில்  இந்த விவகாரத்தை அமலாக்கத்துறை விசாரணைக்கு எடுத்து, பிரணவ் ஜூவல்லர்ஸ் தொடர்பான இடங்களில் கடந்த நவம்பர் 20ம் தேதி சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் ரூ.100 கோடி   முறைகேடு தொடர்பாக இந்தக்கடையின் விளம்பர தூதுவராக உள்ள பிரகாஷ் ராஜுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.  அதில் விசாரணைக்கு நோில் ஆஜராகுமாறு தொிவிக்கப்பட்டுள்ளது.

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்