திருச்சி அம்பிகாபுரம் மற்றும் சமயபுரம் ஆகிய துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், நாளை (சனிக்கிழமை) காலை 9:45 மணி முதல் மாலை 4 மணி வரை இங்கிருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, சமயபுரம், இருங்களூர், புறத்தாக்குடி, கொணலை, கரியமாணிக்கம், எதுமலை, மண்ணச்சநல்லூர், திருவள்ளரை, கூத்துர், மாடக்குடி, அக்கரைப்பட்டி, பாலையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதே போல திருச்சி அம்பிகாபுரம் துணை மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் அரியமங்கலம், எஸ்ஐடி, பாப்பாக்குறிச்சி, எம்ஜிஆர் நகர், சங்கிலியாண்டபுரம், கொட்டப்பட்டு, கீழக்குறிச்சி, மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் மின் நிறுத்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
Comments are closed.