Rock Fort Times
Online News

திருச்சி துவாக்குடி, அதவத்தூர் பகுதிகளில் நாளை மின்தடை…

திருச்சி மாவட்டம் துவாக்குடி துணை மின் நிலையத்தில் நாளை(12.09.2023 ) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே, இந்த மின்நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் நேருநகர், அண்ணா வளைவு, ஏ.ஓ.எல், அக்பர் சாலை, அசூர், அரசு பாலிடெக்னிக், எம்.டி.சாலை, ராவுத்தன் மேடு, பெல்நகர், இந்திராநகர், பெல் டவுன்ஷிப் சி, ஏ, இ, ஆர். மற்றும் பி.எச். செக்டார், தேசிய தொழில்நுட்ப கழகம், துவாக்குடி மற்றும் துவாக்குடி தொழிற்பேட்டை, தேனேரிப்பட்டி, பர்மாநகர், தேவராயநேரி, பொய்கைக்குடி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

இதேபோல, திருச்சி அதவத்தூர் துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே, இந்த துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட போசம்பட்டி, கொய்யாதோப்பு, போதாவூர், புலியூர், எட்டரை, வியாழன்மேடு, கோப்பு, தாயனூர், மல்லியம்பத்து, வாசன்நகர் விரிவாக்கம், குழுமணி, அதவத்தூர் சந்தை, முத்துபிளாட், சுண்ணாம்புக்காரன்பட்டி, பள்ளகாடு, மன்ஜான்கோப்பு, கீரிக்கல்மேடு, செவகாடு, ஒத்தகடை, செங்கல்சூளை, வாசன்வேலி, சிவந்தநகர், இனியானூர், சரவணபுரம், சாந்தாபுரம், வாசன்சிட்டி, அல்லித்துறை, நாச்சிகுறிச்சி, சோமரசம்பேட்டை, அதவத்தூர், சாய்ராம் அடுக்குமாடி குடியிருப்பு, வயலூர், பேரூர், மேலப்பட்டி, கீழவயலூர், முள்ளிக்கறும்பூர், புங்கனூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும். இந்த தகவலை திருச்சி கிழக்கு மின்வாரிய செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்