Rock Fort Times
Online News

திருச்சி தில்லை நகர், சிங்காரத்தோப்பு பகுதிகளில் மே 22-ம் தேதி மின்தடை…!

திருச்சி, தென்னூர் துணைமின் நிலையத்தில் 22.05.2025 (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக அன்று காலை 9.45 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் தில்லைநகர் கிழக்கு மற்றும் மேற்கு விஸ்தரிப்பு பகுதிகள், காந்திபுரம், அண்ணாமலை நகர், கரூர் பைபாஸ்ரோடு, தேவர் காலனி, தென்னூர் ஹைரோடு, அண்ணாநகர் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகள், புதுமாரியம்மன் கோவில் தெரு, சாஸ்திரி ரோடு, ரஹ்மானியபுரம், சேஷபுரம், ராமராயர் அக்ரஹாரம், வடவூர், விநாயகபுரம், வாமடம், ஜீவாநகர், மதுரை ரோடு, கல்யாணசுந்தரபுரம், வள்ளுவர் நகர், நத்தர்ஷா பள்ளிவாசல், பழைய குட்செட் ரோடு, மேலபுலிவார்டு ரோடு, ஜலால் பக்கிரிதெரு, ஜலால் குதிரிதெரு, குப்பாங்குளம், ஜாபர்ஷா தெரு, பெரியகடைவீதி, சூப்பர் பஜார், சிங்கார தோப்பு, பாபு ரோடு, மதுரம் மைதானம், பாரதியார் தெரு, சுண்ணாம்புக்காரத்தெரு, சந்துக்கடை, கள்ளத்தெரு, அல்லிமால் தெரு, சப்ஜெயில்ரோடு, பாரதி நகர், இதாயத் நகர், காயிதே மில்லத்சாலை, பெரியசெட்டிதெரு, சின்னசெட்டிதெரு, பெரியகம்மாள தெரு, சின்னகம்மாள தெரு, மரக்கடை, பழைய பாஸ்போர்ட்ஆபிஸ், வெல்லமண்டி, காந்தி மார்க்கெட், தஞ்சைரோடு, கல்மந்தை, கூனிபஜார் ஆகிய இடங்களில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய செயற்பொறியாளர் கே.ஏ.முத்துராமன் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்