பழைய குடியிருப்புகளை இடிக்கும் பணி காரணமாக திருச்சி மார்சிங்பேட்டை பகுதியில் ஏப்.17 மின்சாரம் நிறுத்தம்…!
திருச்சி நகரியம் கோட்டம், ஜங்ஷன் பிரிவு அலுவலகத்திற்குட்பட்ட மார்சிங்பேட்டை பகுதியில் அரசுக்கு சொந்தமான குடிசை மாற்று வாரிய பழைய குடியிருப்புகளை இடிக்கும் பணி வருகிற 17.04.2025 வியாழக்கிழமை மேற்கொள்ளப்படுகிறது. ஆகவே, பாதுகாப்பு கருதி மின் விநியோகத்தினை தடை செய்ய வேண்டியிருப்பதால், மார்சிங்பேட்டை, ஹவுசிங் யூனிட், கூனி பஜார், கூனி பஜார் மெயின்ரோடு, பள்ளிவாசல் தெரு, பகவதி அம்மன் கோவில் தெரு, சவரியார் கோவில் தெரு மற்றும் நேமத்தான் தெரு ஆகிய பகுதிகளில் 17 -ம் தேதி அன்று காலை 9.45 மணி முதல் மணி மாலை 5.30 வரை மின் விநியோகம் இருக்காது என்று தென்னூர் மின்வாரிய செயற்பொறியாளர் கா.முத்துராமன் வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Comments are closed.