Rock Fort Times
Online News

லால்குடி பகுதியில் நாளை மின் தடை…

திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள எல்.அபிஷேகபுரம் துணை மின் நிலையத்தில் நாளை(20-10-2023) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறப்படும் லால்குடி, ஏ.கே.நகர், பரம சிவபுரம், சீனிவாசபுரம், வரதராஜ் நகர், பச்சனபுரம், உமர் நகர், பாரதி நகர், வ .உ .சி நகர், காமராஜ் நகர், பாலாஜி நகர், ஆங்கரை, மலையப்பபுரம், இடையாற்று மங்கலம், மும்முடி சோழமங்கலம், பெரியவர்சீலி, மயிலரங்கம், பச்சாம்பேட்டை, மேலவாலை, கிருஷ்ணாபுரம், பொக்கட்டகுடி, சேஷசமுத்திரம், பம்பரம்சுற்றி உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9-45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் இயக்கலும் காத்தலும் லால்குடி கோட்ட செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்