பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி வயர்லெஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் நாளை (10.06.2025) செவ்வாய்க்கிழமை மின்தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், கே.சாத்தனூர் துணை மின்நிலைய மின் பாதைகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால், காந்தி நகர், புவனேஸ்வரி நகர், ஆர்.எஸ்.புரம், ஆர்.வி.எஸ். நகர், முகம்மது நகர், ஜே.கே.நகர், ராஜகணபதி நகர், டிஎஸ்என் அவின்யூ, பாரதி நகர், டிஆர்பி நகர், திலகர் நகர், இளங்கோ தெரு, வயர்லெஸ் சாலை, பெரியார் தெரு ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.