மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட முசிறி, மணப்பாறை, டால்மியாபுரம் ஆகிய இடங்களில் இருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளுக்கு நாளை ( மே.17 ) மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை காலை 9:45 மணி முதல் மதியம் 2 மணி வரை காந்தி மார்க்கெட், கல் மந்தை, பூலோகநாதர் கோவில், கிருஷ்ணாபுரம், பெரிய கடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, டால்மியாபுரம் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சார விநியோகம் செய்யப்படும் வடுகர் பேட்டை, மேலரசூர், எம்.கண்ணனூர், சிறுகளத்தூர், கருடா மங்கலம், காணக்கிளியநல்லூர், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9:45 மணி முதல் மாலை 4 மணி வரையும், அதேபோல, திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட முசிறி துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் முசிறி, கைகாட்டி, சந்தப்பாளையம், அழகாப்பட்டி, தண்டலைபுத்தூர், மணமேடு, தும்பலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9:45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல மணப்பாறை துணை மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் செவலூர், கொட்டப்பட்டி, பொத்த மேட்டுப்பட்டி, முத்தப்புடையான்பட்டி, மணப்பாறைப்பட்டி, கீழப் பொய்கைப்பட்டி, இடையபட்டி,மறவனூர்,சித்தகுடிப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9:45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.