திருச்சி கிழக்கு கோட்டம், கே.சாத்தனூர் துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் பொன்மலைப்பட்டி பீடரில் நாளை(02-05-2025) தவிர்க்க முடியாத அவசரப் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக நாளை வெள்ளிக்கிழமை காந்திநகர், ரேஸ்கோர்ஸ் ரோடு, காஜாமலை, காஜாமலை மெயின் ரோடு, ஆர்விஎஸ் நகர், முகமதுநகர், ஆர்.எஸ்புரம், லூர்துசாமி பிள்ளை காலனி, கொட்டபட்டு, இந்திரா நகர், முத்து நகர், வெங்கடேஸ்வர நகர், எம்ஜிஆர் நகர், மற்றும் பேன்சி நகர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9-45 மணி முதல் மாலை 6-00 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.