Rock Fort Times
Online News

பெரும்பிடுகு முத்தரையருக்கு தபால் தலை – மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அறிவித்தார் !

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1350 வது சதய விழா இன்று நடைபெற்று வருகிறது. பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களும்,சமுதாய அமைப்புகளும் அண்ணாரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையிலான பாஜகவினர், திருச்சி ஜங்ஷன் பேருந்து நிலையம் அருகில் உள்ள முத்தரையர் மணி மண்டபத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பிறகு செய்தியாளரிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தமிழகத்தில் நிச்சயம் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும். அப்போது முத்தரையருக்கு புதிய மணிமண்டபம் கட்டப்படும். அடுத்த ஆண்டு பெரும்பிடுகு முத்தரையருக்கு மத்திய அரசின் சார்பில் இதே இடத்தில் தபால்தலை வெளியிடப்படும் என அறிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் சிவசுப்பிரமணியன், திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ஒண்டி முத்து, முன்னாள் மாவட்ட தலைவர்கள் ராஜசேகரன், ராஜேஷ், நிர்வாகிகள் காளீஸ்வரன், அழகேசன், பழனிசாமி, லீமா சிவக்குமார், ஊடகப்பிரிவு முரளி, துணைத்தலைவர் சிவக்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் இந்திரன், நிர்வாகிகள் புவனேஸ்வரி, மலர்கொடி, தினகர், உறையூர் ராஜேஷ், பால்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை தமிழர் தேசம் கட்சி நிறுவனத் தலைவர் கே.கே. செல்வகுமார் வரவேற்றார்

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்