Rock Fort Times
Online News

தமிழ்நாட்டில் ஜூலை 17-ம் தேதி முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி…- அரசாணை வெளியீடு!

இந்தியா முழுவதும் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத் தப்படுகிறது. கடந்த 2011-ம் ஆண்டில் நாடு தழுவிய அளவில் மக்கள் தொகை கணக் கெடுப்பு நடத்தப்பட்டது. இதன்பிறகு 2021-ம் ஆண்டில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கொரோனா பெருந்தொற்று காரணமாக கணக்கெடுப்பு பணி தள்ளி வைக்கப்பட்டது. இந்த சூழலில் நாடு முழுவதும் இரு கட்டங்களாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. இந்நிலையில் தமிழ்நாட்டில் முதற்கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் வருகிற ஜூலை 17ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 30ம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 45 நாட்கள் நடைபெறும் இந்த கணக்கெடுப்பில் வீட்டின் நிலை, வசதிகள், சொத்துக்கள், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட 33 கேள்விகள் இடம் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்