திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நாகலாபுரம் ஊராட்சியில் ராஜவீதி பகுதியில் இரண்டு மாதங்களுக்கு முன்னா் சுமார் ரூ.6,50,000 செலவில் தார் சாலை அமைக்கும் பணி நடைப்பெற்றது. இந்த தார் சாலை அமைக்கும் பொழுது முறையான சாலைகள் அமைக்கும் விதிமுறைகளை பின்பற்றாமலும், சிமெண்ட் ஜல்லி மற்றும் மணல் சரியான அளவு முறையில் பயன்படுத்தாமலும் சாலை அமைத்து சென்றதாக பொதுமக்கள் குற்றம் சாற்றுகின்றனா். மக்களின் வரிப்பணத்தில் தரமற்ற சாலை அமைத்து பணத்தை வீணடிப்பதாக மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சாலையை ஆய்வு செய்து சீரமைத்து தர வேண்டுமென இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Comments are closed, but trackbacks and pingbacks are open.