Rock Fort Times
Online News

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு… அமைச்சர் அன்பில் மகேஷ் வழங்கினார்!

பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் மகிழ்ச்சியோடும், உற்சாகத்தோடும் கொண்டாடும் வகையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.3000 ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, விலை இல்லா வேட்டி- சேலை அடங்கிய பொங்கல் தொகுப்பினை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். இதற்கான திட்டத்தை சென்னையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (ஜன.8) தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து அந்தந்த மாவட்டங்களில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பொங்கல் பரிசு தொகுப்பினை பயனாளிகளுக்கு வழங்கி வருகின்றனர். அந்தவகையில் திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முதலியார்சத்திரம், காஜாபேட்டை ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள நியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3000 ரொக்கம் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கினார். இந்நிகழ்வில் மாநகராட்சி மண்டல குழு தலைவர் மற்றும் மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன், கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், பகுதி கழகச் செயலாளர் விஜயகுமார் மற்றும் ராஜ்முஹம்மத், மாமன்ற உறுப்பினர் லீலாவேலு, மாவட்ட வருவாய் அலுவலர் பாலாஜி, மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் சாலை தவவளவன், தாசில்தார்கள் விக்னேஷ், தனலட்சுமி மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்