திருச்சி குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், பொங்கல் விழா நீதிமன்ற வளாகத்தில் இன்று (ஜன.8) நடைபெற்றது. விழாவிற்கு குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் முல்லை சுரேஷ் தலைமை தாங்கினார். செயலாளர் பி.வி.வெங்கட் வரவேற்புரை ஆற்றினார். ஜெ.எம்.4 நீதிமன்ற நீதிபதி எம்.வித்யா, மாவட்ட கூடுதல் நீதிபதி ஆர்.நந்தினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், ஏராளமான வழக்கறிஞர்கள் தமிழர்களின் பாரம்பரிய உடையணிந்து பங்கேற்றனர். விழாவினை முன்னிட்டு பாட்டு, நடனம், இசை, உறியடித்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. மேலும், மாடு ஒன்று அலங்கரித்து அழைத்து வரப்பட்டிருந்தது. இதற்கான ஏற்பாடுகளை குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகளான துணைத் தலைவர்கள் ஆர்.பிரபு, எஸ்.சசிகுமார், பொருளாளர் எஸ்.ஆர்.கிஷோர் குமார், இணைச்செயலாளர் பி.விஜய நாகராஜன் உள்ளிட்ட பலர் சிறப்பாக செய்திருந்தனர்.

Comments are closed.