பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்வோர் நாளை ( 13.09.2023 ) முதல் விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ரயில்வேயில் 120 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி இருக்கிறது. இதனால், சொந்த ஊர்களுக்கு செல்ல முன்பே திட்டமிட்டுள்ளவர்கள் இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகமான ஐ .ஆர்.சி.டி.சி இணையதளம் வாயிலாகவும், டிக்கெட் முன்பதிவு மையங்களிலும் முன்பதிவு செய்து கொள்வர். அடுத்த ஆண்டு ஜனவரி 14 ஞாயிறு அன்று போகியும், 15 பொங்கல் ,16 மாட்டுப் பொங்கல், 17 காணும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொங்கலுக்கு சொந்த ஊர் செல்வோர் நாளை முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் . ஜனவரி 11-ல் பயணம் செய்ய நாளையும், ஜனவரி 12க்கு 14ம் தேதியும், ஜனவரி 13க்கு வரும் 15ஆம் தேதியிலும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என்று ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.