திருச்சியை அடுத்த கம்பரசம்பேட்டை அருகே உள்ள கணபதி நகர் வெள்ளாந் தெருவை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 46). இவர் சமயபுரம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார். இந்தநிலையில் இன்று ( 01.11.2023 ) காலை மூர்த்தி வீட்டிற்கு போர் தண்ணீர் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து மூர்த்தி, மாடியில் உள்ள மின் மோட்டாரை சரி செய்ய படிக்கட்டில் ஏறினார். அப்போது அவர் திடீரென தடுமாறி கீழே விழுந்ததாக தெரிகிறது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், மூர்த்தி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதையடுத்து மூர்த்தியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது . இதுகுறித்து ஜீயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் காவல்துறையில் பணிச்சுமை அதிகமாக உள்ளதாக வீட்டில் உள்ளவர்களிடம் மூர்த்தி அடிக்கடி புலம்பி வந்ததாக கூறப்படுகிறது. பணிச்சுமை காரணமாக அவர் இறந்தாரா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இறந்த மூர்த்தியின் மனைவி மரிய லூசா கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் எஸ்.எஸ்.ஐயாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். அவர்க ளில் ஒருவர் பி.இ. மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.