திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு அஞ்சலகத்தில் ஊழியராக பணியாற்றும் ஒரு பெண், அலுவலக பணி காரணமாக பொன்மலை பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த ஒரு நபர் அந்த பெண்ணை நிறுத்தி விசாரித்ததோடு பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அந்தப் பெண் கூச்சலிடவேஅருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அதற்குள் அந்த நபர் தனது இருசக்கர வாகனத்தில் வேகமாக தப்பி சென்று விட்டார். நடந்த சம்பவம் குறித்து அந்த பெண் பொன்மலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், இது குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள காண க்கிளியநல்லூர் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றும் கோபாலகிருஷ்ணன் என்பது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
Comments are closed.