திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் “வீலிங்” செய்த வாலிபரை தட்டி தூக்கியது காவல்துறை…! ( வீடியோ இணைப்பு)
நெடுஞ்சாலைகளில் இருசக்கர வாகனங்களில் செல்லும் சில இளைஞர்கள் சாகசங்களில்( வீலிங்) ஈடுபட்டு அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுகின்றனர். அந்தவகையில், அண்மையில் திருச்சி கொள்ளிடம் டோல்கேட் பால தடுப்புச் சுவரில் இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் கைது செய்யப்பட்டு பின்னர் எச்சரிக்கை செய்து அனுப்பப்பட்டார். அதேபோல, சமயபுரம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் சிலர் பைக் சாகசங்களில் ஈடுபட்டனர். அவர்களை பிடித்த போலீசார், அவர்களின் வாழ்க்கை பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக எச்சரிக்கை செய்து விடுவித்தனர். இந்தநிலையில் திருச்சி மாவட்டம், சமயபுரம் பகுதியில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், பைக் சாகசங்களில் ஈடுபடும் நபர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், அச்சுறுத்தும் வகையிலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினம் தெரிவித்துள்ளார். பைக் சாகசங்களில் ஈடுபடும் நபர்கள் குறித்து மாவட்ட காவல் அலுவலக வாட்ஸ்-அப் உதவி எண் 89391 46100 அல்லது அவசர உதவி எண் 100 -ஐ தொடர்பு கொண்டு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Comments are closed.