திருச்சி, குட்ஷெட் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மதுவிலக்கு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்தனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட எடமலைப்பட்டி புதூர் எம்ஜிஆர் நகரை சேர்ந்த யோக நாதனை (20) கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதேபோல திருச்சி சிட்டி பகுதியில் புகையிலை பொருட்கள் மற்றும் போதை ஊசி விற்றதாக பொன்னகர், கருமண்டபம் மாந்தோப்பு பகுதியை சேர்ந்த சுரேஷ் (28), காஜாமலை காலனி அருகே புகையிலை பொருட்கள் விற்றதாக ஏர்போர்ட் காமராஜர் நகரை சேர்ந்த ஜாகிர் உசேன் (32), நடு குஜிலி தெரு அருகே புகையிலைப் பொருட்கள் விற்றதாக அன்புதாசன் (62), பாலக்கரை குட்ஷெட் தண்டவாளம் அருகே புகையிலை விற்றதாக அரியமங்கலம் பகுதியை சேர்ந்த ஸ்ரீனிவாசன் (25) மற்றும் பெல்ஸ் கிரௌண்ட் அருகே புகையிலைப் பொருட்கள் விற்றதாக கே.கே நகர் எல்ஐசி காலனி
பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (23) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 350 கிராம் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.பிறகு அனைவரையும் ஜாமினில் விடுதலை செய்தனர். மேலும், திருச்சி காந்தி மார்க்கெட் பகுதி, கல்பாளையம் அருகே போதை மாத்திரை விற்றதாக எடத்தெரு பிள்ளைமா நகரை சேர்ந்த சச்சின் (22) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 10 போதை மாத்திரைகள், ஊசிகளை பறிமுதல் செய்தனர்.

Comments are closed.