திருச்சி, காந்தி மார்க்கெட் பகுதியில் முதியவரை தாக்கி பணம் பறித்த சிறுவன் உட்பட 3 பேரை தட்டி தூக்கியது காவல்துறை…!
திருச்சி, பாலக்கரை பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன்(65). இவர் காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள லாரி புக்கிங் நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றி வருகிறார். இவர், நேற்று மதியம் (ஏப்ரல் 9) பணம் வசூலித்து விட்டு காந்தி மார்க்கெட் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த 3 பேர், விஸ்வநாதனை தாக்கி அவர் பாக்கெட்டில் வைத்திருந்த 6000 ரூபாய் பணத்தை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் விஸ்வநாதன் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அந்த சிசிடிவியில் 3 பேர் விஸ்வநாதனை தாக்கி பணத்தை பறித்து விட்டு தப்பி ஓடிய காட்சிகள் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி, வடக்கு தாராநல்லூரை சேர்ந்த தர்மதுரை, இபி ரோடை சேர்ந்த அண்ணாமலை(21) மற்றும் 17 வயதுடைய சிறுவன் ஆகிய 3 பேரை காந்தி மார்க்கெட் போலீசார் கைது செய்தனர்.
Comments are closed.