Rock Fort Times
Online News

பாஜக நிர்வாகி நடிகை ஜெயலட்சுமி யிடம் போலீசார் விசாரணை…!

பாடலாசிரியர் சினேகனின் ‘சினேகம் பவுண்டேஷன்’ புகார் தொடர்பாக விசாரணை செய்வதற்காக திருமங்கலம் போலீசார், பாஜக நிர்வாகியும், நடிகையுமான ஜெயலட்சுமி வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2022 ஆம் ஆண்டு ‘சினேகம் பவுண்டேஷன்’ யாருக்கு சொந்தம் என்பது குறித்து பாடல் ஆசிரியர் சினேகன் மற்றும் பாஜக நிர்வாகியும், நடிகையுமான ஜெயலட்சுமி ஆகியோர் மாறி மாறி காவல் நிலையங்களில் புகார் அளித்தனர். மேலும், நீதிமன்ற உத்தரவுப்படி திருமங்கலம் போலீசார் இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக தற்போது ஜெயலட்சுமி வீட்டுக்குச் சென்று திருமங்கலம் போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்