Rock Fort Times
Online News

என்கவுன்டர் செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜா தொடர்புடைய இடங்களில் போலீசார் அதிரடி சோதனை…!

சென்னையில் 6 கொலை உட்பட 39 வழக்குகளில் தொடரபுடைய ரவுடி சீசிங் ராஜா கடந்த செப்டம்பர் மாதம் 23-ம் தேதி போலீஸாரால் என்கவுன்டர்
செய்யப்பட்டார். இவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி இல்லை, இவருக்கும், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் தொடர்பு இல்லை என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் என்கவுன்டர் செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜா வீடு மற்றும் தொடர்புடைய உறவினர்கள் வீடுகளில் காவல்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் இணைந்து சோதனை நடத்தி வருகின்றனர். தாம்பரம், சோலையூர், வில்லிவாக்கம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை நடைபெற்று வருகின்றன. சீசிங் ராஜா ரவுடியாக இருந்தபோது சம்பாதித்த பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா?, கள்ளத் துப்பாக்கிகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா?, சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்துள்ளதா என்பன போன்ற கோணங்களில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்