திருச்சி மாவட்டத்தில் போதைப் பொருட்கள் விற்பனையை தடுப்பதற்காக போலீஸ் சூப்பிரண்டு செல்வ நாகரத்தினம் மற்றும் சிட்டி கமிஷனர் காமினி ஆகியோர் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க அந்தந்த காவல் நிலைய போலீசார் தீவிர சோதனை மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், போதைப் பொருட்கள் விற்றதாக திருவெறும்பூர் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் 3 பேரும், கே.கே.நகர் காவல் நிலையப் பகுதியில் 3 பேர், ஜீயபுரம், பேட்டவாய்த்தலை, துவாக்குடி, ஜம்புநாதபுரம், துவரங்குறிச்சி, புத்தாநத்தம் ஆகிய காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் தலா 2 பேர் உட்பட மொத்தம் 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
Comments are closed.