திருச்சியில் நண்பர்களுடன் சேர்ந்து மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த காதலனை தட்டி தூக்கியது காவல்துறை- மேலும் 5 பேருக்கு வலை…!
திருச்சி மாவட்டம், லால்குடி பகுதியை சேர்ந்த ஐடிஐ படித்து வரும் 17 வயது மாணவியை சிறுமருதூர் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகன் சிலம்பு என்கிற சிலம்பரசன் காதலித்து வந்துள்ளார். இதை உண்மை என்று நம்பிய அந்த மாணவியும் சிலம்பரசனை காதலித்தார். இந்தநிலையில் கடந்த ஏப்ரல் மாதம் தனது காதலியை பைக்கில் அழைத்துக்கொண்டு நம்பர் 1 டோல்கேட் பகுதியில் உள்ள நண்பர் ஒருவரது வீட்டுக்கு சிலம்பரசன் சென்றுள்ளார். அங்கு ஏற்கனவே 5 பேர் இருந்தனர். இவர்கள் அனைவரும் சேர்ந்து அந்த மாணவியை மிரட்டி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனை அவர்கள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு அந்த மாணவியை மிரட்டி தொடர்ந்து பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதில், அந்த மாணவி கர்ப்பமானார். இதனை அறிந்த சிலம்பரசன், அந்த மாணவிக்கு கருக்கலைப்பு மாத்திரைகளை வாங்கி கொடுத்து கருவை கலைத்துள்ளார். இதனால், அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டார். இதுகுறித்து மாணவியின் தாய், விசாரித்தபோது நடந்த சம்பவத்தை கூறி அந்த மாணவி கதறி அழுதுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தாய், தனது மகளை அழைத்துக் கொண்டு திருச்சியில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்து எஸ் பி வருண்குமாரிடம் புகார் அளித்தார். பின்னர் அந்த மாணவி செய்தி யாளர்களிடம் கூறுகையில், சிலம்பரசன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழியிடம் கார் டிரைவராக பணியாற்றி வருவதாகவும், தன்னை கைவிட மாட்டேன் என்று வாக்குறுதி அளித்து காதலித்து வந்தார். ஆனால், நண்பரின் வீட்டுக்கு அழைத்துச் சென்று என்னை சிலம்பரசன் உள்பட 6 பேர் எனது வாழ்க்கையை நாசமாக்கி விட்டனர், என்று கூறினார். இதுதொடர்பாக அமைச்சர் வட்டாரத்தில் விசாரித்தபோது, அப்படி யாரும் கார் டிரைவராக தங்களிடம் பணியாற்றவில்லை என்று மறுத்தனர். இந்நிலையில் ,இந்த புகார் மனு மீது விசாரிக்க எஸ்பி வருண்குமார் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி சிலம்பரசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தொடர்பாக சிலம்பரசனின் நண்பர்கள் 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Comments are closed.