வள்ளலார் நினைவு தினத்தையொட்டி நேற்று (11-02-2025) தமிழக அரசு மதுக்கடைகளுக்கு விடுமுறை அளித்திருந்தது. எனவே, நேற்று மதுக்கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் மூடப்பட்டிருந்தன. இதுபோன்ற விடுமுறை நாட்களில் சிலர் கள்ளத்தனமாக கூடுதல் விலைக்கு மது விற்று கல்லா கட்டி வருகின்றனர். இதனை தடுக்க திருச்சி மாநகரத்துக்கு உட்பட்ட அந்தந்த காவல் நிலைய போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள கக்கன் காலனி செங்குளம் கரை பகுதியில் மது விற்ற அரியமங்கலம் ஆயில்மில் சோதனைச்சாவடி பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர் (48) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 164 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதேபோல, திருவெறும்பூர் தொண்டமான்பட்டி ரயில்வே மேம்பாலம் அருகே மது விற்பனை செய்த துவாக்குடி வடக்குமலை அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த பிரபு ( 31 ) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 116 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதில் ஸ்ரீதர் மீது ஏற்கனவே திருவெறும்பூர் காவல் நிலையத்தில் 6 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.