குற்றங்களை தடுக்க திருச்சி,காந்தி மார்க்கெட்டில் ” போலீஸ் பீட் ” வியாபாரிகள் ஒற்றுமைச் சங்கம் காவல்துறையிடம் மனு !
திருச்சி மாநகரில் பரபரப்பாக இயங்கி வரும் பகுதிகளில் காந்தி மார்க்கெட்டும் ஒன்று. காய்கறிகள், பழங்கள் உட்பட்டவற்றை வாங்க திருச்சி மட்டுமின்றி அருகில் உள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகளும், சிறு வணிகர்களும் இங்கு வருகை தருகின்றனர். இதனால் இப்பகுதி இரவு, பகல் என 24 மணி நேரமும் பரபரப்பாக இயங்கி வருகிறது. இந்நிலையில் அண்மை காலமாக இப்பகுதிகளில் திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. இதை தடுக்கும் விதத்தில் மாநகர காவல் துறையை சார்பில் ” போலீஸ் பீட் ” அமைத்து தர வேண்டும் என திருச்சி காந்தி மார்க்கெட் தரைக்கடை மற்றும் நிலையான கடை வியாபாரிகள் ஒற்றுமை சங்கம் சார்பில் சங்கத் தலைவர் யு.எஸ். கருப்பையா தலைமையில் சங்க நிர்வாகிகள் காவல் நிலையத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது.,திருச்சி காந்தி மார்க்கெட் உள்ளே இரவிலும், பகலிலும் போலீசார் ரோந்து பணிகளை மேற்கொண்டு குற்ற செயல்கள் நடைபெறாத வண்ணம் தடுத்திட வேண்டும். மேலும் காந்தி மார்க்கெட் காந்தி சிலை அருகில் ஒரு போலீஸ் புற காவல் நிலையத்தையும், தர்பார் மேடு, காந்தி மார்க்கெட் 5ம் நம்பர் டோல்கேட் வெளியே இடதுபுறம் காலியாக உள்ள இடத்தில் ஒரு புற காவல் நிலையமும் அமைத்து தினசரி போக்குவரத்தை சரி செய்வதோடு பொதுமக்கள் பாதுகாப்பாக மார்க்கெட்டிற்கு வந்து செல்ல போலீசார் உதவி செய்ய வேண்டும்.
எங்கள் கோரிக்கையை ஏற்று வளையல் கார தெரு, நடுக்கல்லுக்கார தெரு,ஏ.பி நகர், விஸ்வாஷ் நகர், மகாலட்சுமி நகர், உள்ளிட்ட 14 இடங்களில் போலீஸ் பீட் அமைத்ததற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.இதேபோல் காந்தி மார்க்கெட் கிழக்கு பகுதியில் இருபுறமும் இரண்டு புற காவல் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
Comments are closed.