Rock Fort Times
Online News

ஜல்லிக்கட்டு போட்டியின் போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி -திருச்சியில் பரபரப்பு!

திருச்சி அருகே தெற்கு காட்டூ ரில் நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும் இடத்திற்கு உரிமையாளரிடம் முறையான அனுமதி பெறவில்லை என்றும் ஜல்லிக்கட்டு போட்டியை நடைபெறும் பகுதிக்கு சொந்தமான பாப்பா குறிச்சி, கீதாபுரம், காந்திபுரம், வீதி வடங்கம், மஞ்சத்திடல் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மாட்டின் உரிமையாளர்களுக்கு ஜல்லிக்கட்டு குழுவினர் டோக்கன் வழங்கவில்லை என்றும் கூறப்படுகிறது. அதனால் தங்கள் பகுதியில் மாடுகள் வரக்கூடாது என வெளியூரில் இருந்து ஜல்லிக்கட்டு மாடுகளை ஏற்றி வரும் வாகனங்களை மறித்து உள்ளூர் காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு போலீசார் விரைந்து சமரசம் செய்து வந்த நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஜல்லிக்கட்டு வாடிவாசல் பகுதியை அதிரடியாக முற்றுகையிட்டு ஜல்லிக்கட்டு போட்டியை நிறுத்துமாறு கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு திருவெறும்பூர் டிஎஸ்பி அறிவழகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்மீது தடியடி நடத்தி விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்