Rock Fort Times
Online News

கூரியரில் போதை மாத்திரை சப்ளை- திருச்சியில் 3 பேரை கைது செய்தது காவல்துறை..!

திருச்சி, சங்கிலியாண்டபுரம், மணல்வாரித்துறை பகுதியில் தனியார் நிறுவன கொரியரில் போதை மாத்திரைகள் கடத்தப்படுவதாக பாலக்கரை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டனர். அப்போது சந்தேகிக்கும் வகையில் இருந்தவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் திருச்சி, எடத்தெருவைச் சேர்ந்த சச்சின் (21), வரகனேரி, பென்ஷனர் தெருவைச் சேர்ந்த உதய சங்கர் (21) மற்றும் கரூர் மாவட்டம், காந்தி கிராமத்தைச் சேர்ந்த மாதேஷ் (18) என்பதும், கொரியரில் போதை மாத்திரைகள் வைத்திருந்ததும் தெரியவந்தது. இந்த 3 பேரையும் பாலக்கரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்