மத்திய அரசின், தொழிலாளர் மற்றும் விவசாய விரோத கொள்கைகளை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நாடு தழுவிய அளவில் பொது வேலை நிறுத்தம் மற்றும் ரயில் மறியல் போராட்டம் இன்று(12-02-2026) நடைபெற்றது. அதேபோல திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் முன்பு ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக அவர்கள் திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து ரயில் நிலையம் வரை நடந்து வந்தனர். பின்னர் அவர்கள் ரயில் நிலையத்திற்குள் நுழைய முயன்ற போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது சிலர் ரயில் நிலையத்திற்குள் ஓடினர். போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த சம்பவத்தால் ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Comments are closed.