Rock Fort Times
Online News

கவிஞரும், பட்டிமன்ற பேச்சாளருமான நந்தலாலா காலமானார்…!

கவிஞரும், பட்டிமன்ற பேச்சாளருமான நந்தலாலாவுக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. ஓசூர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அங்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த கவிஞர் நந்தலாலா, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் (தமுஎகச) மாநில துணைத் தலைவராக இருந்த கவிஞர் நந்தலாலா, முன்னணி பட்டிமன்றப் பேச்சாளார் ஆவார். இவரின் மறைவுக்கு தமுஎகச நிர்வாகிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், முற்போக்கு எழுத்தாளர்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கவிஞர் நந்தலாலாவின் உடல் ஓசூரில் இருந்து திருச்சி கருமண்டபம் விஸ்வாஸ் நகரில் உள்ள அவரது இல்லத்துக்கு இரவு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்