Rock Fort Times
Online News

3 சட்டமன்ற தொகுதிகளுக்கான பாமக வேட்பாளர்கள் அறிவிப்பு…!

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சிக்கு 18 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில் 3 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ளார். அதன்படி, கீழ்வேளூரில்  பாமக பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன், அம்பத்தூரில் மாநிலத் துணைத் தலைவர், கே.என். சேகர், செஞ்சியில் பாமக இளைஞரணித் தலைவர் கணேஷ் குமார் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 15 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பின்னர் அறிவிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்