ரயில் பயணிகளிடம் வந்தே பாரத் ரயில் சேவைக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதனையடுத்து புதிதாக எர்ணாகுளம் – பெங்களூரு, பிரோஸ்பூர் – டில்லி, லக்னோ – ஷஹாரான்பூர், பனாரஸ் – கஜூராஹோ நகரங்களுக்கு இடையே புதிதாக 4 வந்தே பாரத் ரயில் சேவையை இன்று (நவ.8) காலை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து துவக்கி வைத்தார். இதற்கான நிகழ்ச்சி வாரணாசியில் நடந்தது. நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: ஒரு நகரின் வளர்ச்சி என்பது சிறந்த போக்குவரத்து தொடர்பு கிடைத்ததும் தொடங்குகிறது. உள்கட்டமைப்பு என்பது பெரிய பாலங்கள் நெடுஞ்சாலைகளுடன் நின்று விடுவதில்லை. புதிய வந்தே பாரத் ரயில் சேவைகள் தொடர்புகளை மேம்படுத்தி மக்களுக்கு கூடுதல் வசதியை தரும். பெரும்பாலான நாடுகளின் வளர்ச்சியில் உள்கட்டமைப்பு முக்கிய பங்கு வகித்துள்ளது. இந்தியாவும் வளர்ச்சிப் பாதையில் வேகமாக முன்னேறி வருகிறது. வந்தே பாரத், நமோ பாரத் மற்றும் அமிர்த பாரத் போன்ற ரயில்கள் புதிய தலைமுறை இந்திய ரயில்வேக்கு அடித்தளம் அமைக்கின்றன. இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.