பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி இன்று (மே 6) காலை வெளியிடப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் 13, 371 மாணவர்கள்,16,244 மாணவிகள் என மொத்தம் 29, 615 பேர் தேர்வு எழுதினர். இதில் ஆண்கள் 12,491 பேர் (93.42%), பெண்கள் 15,863 (97.65%) என மொத்தம் 28.354 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 95.74 சதவிகித தேர்ச்சியாகும். திருச்சி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பயின்று தேர்வு எழுதிய 4,775 மாணவர்களில் 4253 பேரும், மாணவியர் 5,589 பேரில் 5,329 பேரும் என மொத்தம் 10,364 பேருக்கு 9.582 பேர் (92.45 %) தேர்ச்சி பெற்றுள்ளனர். திருச்சி மாவட்டம் தமிழக அளவில் 13 ஆவது இடத்தை பெற்றுள்ளது. கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் 2021 – 22 கல்வியாண்டில் 95.93% தேர்ச்சி பெற்று 12-ஆவது இடத்தையும், 2022 -23 ஆம் கல்வியாண்டில் 96.02 % தேர்ச்சி பெற்று 13 ஆவது இடத்தையும் பெற்றிருந்தது. நிகழாண்டும் 95.74 % தேர்ச்சியை பெற்று அதே 13 வது இடத்தை தக்க வைத்துள்ளது.
Comments are closed.