Rock Fort Times
Online News

தென்கொரியாவில் தரை இறங்கும்போது வெடித்து சிதறிய விமானம்- 62 பேர் பலி…! ( பதை, பதைக்க வைக்கும் வீடியோ)

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து 175 பயணிகள், 6 விமான ஊழியர்கள் என மொத்தம் 181 பேருடன் தென்கொரியாவின் முவான் நகருக்கு இன்று(29-12-2024) விமானம் சென்று கொண்டிருந்தது. முவான் விமான நிலையத்தில் தரையிறங்க முயற்சித்தபோது விமானம் விபத்துக்குள்ளானது. லேண்டிங் கியரில் கோளாறு ஏற்பட்டதால் தரை இறங்கும்போது விமானம் வெடித்து சிதறியது. இந்த கோர விபத்தில் 62 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். இதையடுத்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்தவர்களின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்