தி.மு.க.வின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் குறித்து நாளை ( 07.07.2023 ) மாலை 3 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ள கூட்டத்தில் அனைத்து மாவட்ட கலெக்டர்களும் நேரடியாக கலந்து கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். மேலும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், வருவாய்துறை, கூட்டுறவுத்துறை உயர் அதிகாரிகள், முக்கிய வங்கிகளின் மேலாளர்கள் ஆன்லைன் வாயிலாக பங்கேற்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது உரிமைத்தொகை பெறுவதற்கு தகுதி உள்ள மகளிர் யார் என்பது குறித்தும், அதற்கான வரம்புகளை நிர்ணயிப்பது பற்றியும் முடிவெடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.