வளைகுடா நாடுகளில் போர் நீடித்து வருவதால் கச்சா எண்ணெய், சமையல் கேஸ்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். போர் நீடித்து வந்தாலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. இந்தநிலையில் திருச்சியில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பெட்ரோலுக்கு 5 ரூபாயும், டீசலுக்கு 3 ரூபாயும் அதிகமாக வசூலிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில், இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் எச்பி போன்ற நிறுவனங்கள் பிரீமியம் பெட்ரோலுக்கு 2 ரூபாய் மட்டுமே உயர்த்தியுள்ள நிலையில், இந்த தனியார் பங்கில் அதிக விலை நிர்ணயம் செய்யப்பட்டதால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Comments are closed.