திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் திருச்சி மாவட்ட செயலாளர் ராயல் சித்திக் தலைமையில் மாவட்ட பொருளாளர் தென்னூர் கலீல் ரகுமான், துணை செயலாளர் முஹம்மது தாஹா, தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தொழிற்சங்கமான மக்கள் ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் மாவட்ட செயலாளர் டேவிட் ஆரோக்கியராஜ், ஆட்டோ தொழிற் சங்க மாவட்ட செயலாளர் பாலக்கரை ஜாகீர் ஷரீப், திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி செயலாளர் ரபீக் ராஜா மற்றும் நிர்வாகிகள் ஒரு புகார் மனு அளித்தனர். அந்த மனுவில், தனக்கு வாக்களிக்காத இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களை சாத்தான்களின் பிள்ளைகள் என்று கூறிவிட்டு, இது நாள் வரை தனது கருத்துக்கு வருத்தமும், அந்த வார்த்தையை திரும்ப பெறாமலும் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.