திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் பெரியார் பிறந்த நாள் நிகழ்ச்சி..
திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், தந்தை பெரியார் 145வது பிறந்த நாள் விழா சமூக நீதி நாளாக கொண்டாடப்பட்டது.
தெற்கு
மாவட்ட திமுக செயலாளரும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழிகாட்டுதலின்படி
கிழக்கு மாநகர செயலாளரும், மண்டல தலைவருமான மு.மதிவாணன் தலைமையில் திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் எஸ். இனிகோ இருதயராஜ்,
தலைமை செயற்குழு உறுப்பினர் கே.என். சேகரன் ஆகியோர் முன்னிலையில் திருச்சி காட்டூர் பகுதியில் அமைந்துள்ள தந்தை பெரியாரின் திருஉருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில்,
மாநில நிர்வாகி செந்தில், மாவட்டத் துணைச் செயலாளர்கள் செங்குட்டுவன், லீலாவேலு, பகுதி கழகச் செயலாளர்கள் நீலமேகம், தர்மராஜ், மோகன், மணிவேல், பாபு,
விஜயகுமார், சிவகுமார், ஒன்றிய செயலாளர்கள்
கருணாநிதி, கங்காதரன், பழனி யாண்டி, ராஜேந்திரன் மற்றும் மாவட்ட, மாநகர நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், பேரூர், வட்ட, வார்டு, கிளை கழகச் செயலாளர்கள், அணிகளின் , அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.