பெரம்பலூர் ஹேன்ஸ் ரோவர் பப்ளிக் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு அறங்காவலர் மகாலட்சுமி வரதராஜன் தலைமை வகித்தார். பள்ளியின் முதல்வர் ஜுன் ஜாக்குலின் மற்றும் துணை முதல்வர் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவின் சிறப்பு அழைப்பாளராக பிரியம் மருத்துவமனை தலைமை நிர்வாகி மணிமாலா விவேக் கலந்து கொண்டு மழலையர் வகுப்பு முடித்து துவக்கப் பள்ளிக்கு முன்னேறிய முதலாம் ஆண்டு குழந்தைகளுக்கு பட்டம் அளித்து சிறப்புரை ஆற்றினார். இவ்விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஏற்பாடுகளை அலுவலக மேலாளர் குமாரகிருஷ்ணன் மற்றும் ஒருங்கிணைப்பாளர் அந்தோணி டேவிட் ஆகியோர் செய்திருந்தனர்
