வளைகுடா நாடுகளில் போர் நீடித்து வருவதால் வர்த்தக சிலிண்டர் மற்றும் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அந்தவகையில் திருச்சி மாவட்டம், மணப்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சிலிண்டர் முன்பதிவு செய்ய வேண்டும் என்றால் அந்த அழைப்பு பல நேரங்களில் கனெக்ட் ஆவதில்லை. ஒருசில நேரங்களில் சுவிட்ச் ஆப் என்றும் தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளதாகவும் தகவல் வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால், எரிவாயு சிலிண்டர் பெறமுடியாத மக்கள் எரிவாயு முகவர் அலுவலகத்திற்கு வந்து எரிவாயு பெற்றுச் சென்றனர். இருப்பினும் சுமார் 10 நாட்களுக்கு முன்பு வரை பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே சிலிண்டர் வழங்கப்படுவதாக தெரிவித்தனர். நேரில் சென்று சிலிண்டரை வாங்கிக் கொள்ள வேண்டும் என்று கூறுவதால் மக்கள் நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் கால்கடுக்க காத்திருந்து வாங்கிச் செல்லும் நிலை உள்ளதாகவும் வேதனையுடன் தெரிவித்தனர்.

Comments are closed.