திருச்சி மாநகரம் முழுவதும் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளுக்காக சாலைகளில் குழிகள் தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன. குழாய்கள் மூலம் செல்லப்படும் கழிவுநீர்களை சுத்திகரிப்பதற்காக சுத்திகரிப்பு நிலையம் ஒவ்வொரு பகுதிகளிலும் அமைக்கப்பட்டு வருகிறது. திருச்சி மேல கல்கண்டார்கோட்டை 45 வது வார்டு தட்டான் குளத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாமிநாதன் நகர், மாருதி நகர், அர்ஜுனன் நகர், கணேஷ் நகர் ஆகிய பகுதிமக்கள் திடீரென மேல கல்கண்டார் கோட்டை அர்ஜுனன் நகர் பேருந்து நிறுத்தத்தில் அரசு பேருந்தை வழிமறித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த பொன்மலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் மாநகராட்சி உதவி கமிஷனர் ரமேஷ்பாபு தலைமையிலான அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தி , நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்தப் போராட்டத்தால் சுமார் 1 மணி நேரம்போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

