Rock Fort Times
Online News

கோவை மாநகராட்சி மேயர் வார்டில் தண்ணீர் தட்டுப்பாடு! பொதுமக்கள் சாலை மறியல் !

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட மேயருக்கு சொந்தமான வார்டு பகுதியில் நீண்ட நாட்களாக குடிதண்ணீர் வரவில்லை என பொதுமக்கள் திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கியது முதலே தண்ணீர் தட்டுப்பாடு துவங்கியுள்ளது. குறிப்பாக கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இந்த குடிநீர் தட்டுப்பாடு என்பது அதிகமாகவே நிலவி வருகிறது. இந்த தட்டுப்பாட்டை போக்க ஆங்காங்கே பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில்  கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட மணியகாரம்பாளையம் மேயர் கல்பனா ஆனந்தகுமாருக்கு சொந்தமான வார்டு லட்சுமிபுரம் வடக்கு பகுதியில் கடந்த 20 நாட்களாக குடி தண்ணீர் வரவில்லை என அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திடீரென திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை அடுத்து போராட்டத்தை கைவிட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்