Rock Fort Times
Online News

திருச்சி, பொன்மலையில் பாதையை அடைக்கப் போவதாக ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு பலகை வைத்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி…!

திருச்சி தெற்கு ரயில்வே சார்பாக பொன்மலையில் ஒரு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில், மேல கல்கண்டார் கோட்டை பஞ்சாயத்து போர்டு வழியாக பழைய பொன்மலை சி- டைப் காலனியில் இருந்து பொன்மலை ரயில்வே பணிமனை செல்லும் வழியில் ரயில்வே பாதை அமைய இருப்பதால், 9.12.2024 இன்றிலிருந்து இந்தப் பகுதி நிரந்தரமாக மூடப்பட உள்ளது. எனவே பொதுமக்கள் மாற்றுப் பாதையில் செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே மேலகல்கண்டார் கோட்டையை சேர்ந்த பொதுமக்கள் எங்களுக்கு உடனடியாக மாற்றுப் பாதை அமைத்து தர வேண்டுமென கோரிக்கை விடுத்ததோடு போராட்டமும் நடத்தினர். அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மூலமாகவும் ரயில்வே பொது மேலாளரிடம் மனு அளித்தனர். அதனைத் தொடர்ந்து திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோவிடம் மனு அளித்தனர். பின்னர் நடந்த அமைதி பேச்சு வார்த்தை கூட்டத்தில் வேறு ஒரு பாதை அமைத்து தரப்படும் என்று ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால், பொதுமக்களும், வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.இந்தநிலையில், பாதை அமைத்து தராமல் திடீரென அறிவிப்பு பலகை வைத்திருப்பது அங்கு வசிக்கும் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாவட்ட நிர்வாகமும், ரயில்வே நிர்வாகமும் மாற்று பாதை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாட்டுக்கு நல்லது சொல்லும் || சிறப்பான‌ மேடைப் பேச்சு...

1 of 940

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்