திருச்சி, ரெட்டை மலையிலிருந்து கருமண்டபம் செல்லும் கோரையாற்றில் முதலை நடமாட்டம் இருந்து வருகிறது. இதனை மெய்ப்பிக்கும் விதமாக உய்யக்கொண்டான் ஆற்றங்கரை பகுதியில் ஒரு வாகன ஓட்டி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது தூரத்தில் ஒரு முதலை ஆற்றில் இருந்து ரோட்டை மெல்ல கடந்து செல்வதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர், தனது செல்போனில் அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த பலர் அச்சத்தில் உறைந்தனர். திருச்சி உய்யக்கொண்டான் ஆற்றில் சமீப காலமாக முதலை நடமாட்டம் இருந்து வருகிறது. தற்போது கோரையாற்றிலும் முதலை நடமாட்டம் இருப்பது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. எனவே, பொதுமக்களை அச்சுறுத்தி வரும் முதலையை பிடிக்க மாவட்ட நிர்வாகத்தினரும், வனத்துறையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டுக்கு நல்லது சொல்லும் || சிறப்பான மேடைப் பேச்சு...

Now Playing
நாட்டுக்கு நல்லது சொல்லும் || சிறப்பான மேடைப் பேச்சு...

Now Playing
நாய்கள்தொல்லையை கட்டுப்படுத்தபாராளுமன்றத்தில் புதிய சட்டம் கொண்டு வர வேண்டும் -அமைச்சர் கே.என்.நேரு

Now Playing
இறங்கி வந்த மத்திய அரசு-மத்திய அமைச்சருக்கு, தமிழக அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்...

Now Playing
இயக்குனர் சுதா கொங்கரா பகிர்ந்த SK பிறந்தநாள் ட்ரீட் வீடியோ

Now Playing
ஸ்ரீரங்கம் உபகோவிலான அன்பில் சுந்தரராஜப்பெருமாள் திருக்கோவில் தங்க கருட சேவை

Now Playing
நாட்டுக்கு நல்லது சொல்லும் || சிறப்பான மேடைப் பேச்சு...
1
of 996

Comments are closed.