திருச்சி மாவட்டம் சமயபுரம் சிறுகனூர் அருகே எம். ஆர். பாளையம் மற்றும் தச்சங்குறிச்சி பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான காப்புக்காடு உள்ளது. இங்கு மான், மயில்கள், காட்டுப்பன்றிகள், குரங்குகள் உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றன. இந்த காப்பு காட்டில் யானைகள் மறுவாழ்வு மையமும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்த தேசிய பறவையான மயில் ஒன்று இரை தேடி சிறுகனூர் பகுதிக்கு வந்துள்ளது. அப்போது சிறுகனூரில் உள்ள திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்கும்போது அவ்வழியே சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தது. இந்நிலையில் அவ்வழியாக சென்ற லால்குடி போலீஸ் டிஎஸ்பி அஜய்தங்கம் தனது வாகனத்தை நிறுத்தி உயிரிழந்த மயிலை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.