திருச்சி வயலூர் ரோடு கணபதி நகரில் சுப்ரமணியன் (வயது 67) என்பவர் நகை அடகு கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு டிப்- டாப்பாக உடை அணிந்து வந்த ஒரு பெண், 20 கிராம் நகையை அடமானம் வைத்து ரூ. 75 ஆயிரம் பெற்றார். பின்னர் அந்த பெண் அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டார். சிறிது நேரம் கழித்து அந்த நகையை பரிசோதனை செய்தபோது அது போலி நகை என்பது தெரிய வந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த சுப்ரமணியன், திருச்சி அரசு மருத்துவமனை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.