பொறியியல் பணிகள் காரணமாக ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், காயங்குளம் பகுதியில் பொறியியல் பணிகள் சென்னை எழும்பூர் – குருவாயூர் விரைவு ரயிலானது (16127) மே 24-ம் தேதி குருவாயூர் சாலக்குடி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது சென்னை எழும்பூர் – சாலக்குடி வரை மட்டுமே இயக்கப்படும். சென்னை எழும்பூர்- குருவாயூர் விரைவு ரயிலானது (16127) மே 22-ம் தேதி தேவைப்படும் இடங்களில் 40 நிமிடங்கள் நின்று தாமதமாகப் புறப்படும். காரைக்கால்- எர்ணாகுளம் விரைவு ரயிலானது (16187) மே 24-ம் தேதி தேவைப்படும் இடங்களில் 45 நிமிடங்கள் நின்று தாமதமாக புறப்படும். இதேபோல, கொடைக்கானல் சாலை வாடிப்பட்டி இடையே பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் மயிலாடுதுறை- செங்கோட்டை விரைவு ரயிலானது (16847) 21-ம் தேதி மணப்பாறை, வையம்பட்டி, வடமதுரை, திண்டுக்கல், கொடைக்கானல் சாலை, மதுரை திருப்பரங்குன்றம். திருமங்கலம், கள்ளிக்குடி ரயில் நிலையங்களைத் தவிர்த்து திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக இயக்கப்படும். புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை ரயில் நிலையங்களில் கூடுதலாக நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.